Frequently Asked Questions

நுழைவு நிர்வாக முறை என்றால் என்ன?

நுழைவு நிர்வாக முறை ( நு.நி.மு) மேகக்கணி முறையை அடிப்படையாகக் கொண்ட இலக்கவியல் நுழைவு பதிவு முறையாகும். தொடர்புக் கொள்ளும் முயற்சிக்காக இம்முறை முக்கிய சேவைகள் வழங்கப்படும் வேலையிடங்களுக்கும் குறிப்பிட்ட பொதுவிடங்களுக்கும் செல்பவர்களின் பெயர்கள், கைபேசி எண்கள், உடல் வெப்ப நிலை ஆகியவற்றைப் பதிவு செய்கிறது.

நுழைவு நிர்வாக முறை ( நு.நி.மு) தளங்களின் நுழைவாய்களில் வைக்கப்பட்டிருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதின் மூலம் பெறப்படும் தகவலை சேகரிக்கவும் உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது

நுழைவு நிர்வாக முறையை எங்கு பயன்படுத்த வேண்டும்?

மக்கள் நீண்ட நேரத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டிய இடங்கள் அல்லது குறுகிய இடத்தில் அல்லது மக்களின் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்.

2020 ஜுன் முதல் நுழைவு நிர்வாக முறையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் இடங்கள் :

 • அலுவலகங்கள் தொழிற்சாலைகள் போன்ற வேலையிடங்கள்
 • பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள்
 • பாலர் பள்ளிகள்
 • சுகாதார மையங்கள் உதாரணம்: மருத்துவமனை, கிளினிக், பாரம்பரிய மருத்துவ கிளினிக்
 • பராமரிப்பு இல்லங்கள்
 • முடி திருத்தும் கடைகள் / சிகை அலங்கார நிலையங்கள்
 • பல்வகை பொருட்களை விற்கும் கடைகள்
 • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல காய்கறி இறைச்சி சந்தைகள்
 • பேரங்காடிகள்
 • காலை சிற்றுண்டியுடன் கூடிய தங்கும் விடுதிகள், தங்கும் விடுதிகள் சுற்றுலா விடுதிகள்
 • சுற்றுலா ஈர்ப்பு தளங்கள்
 • உணவகங்கள் / உணவு விடுதிகள்
 • சேவை மையங்கள்
 • பொருள் - போக்குவரத்து சேவைகள் ( கிடங்குகள்/ பேருந்து முனையங்கள் )

சாலையோர நிறுத்தங்களில் இருந்து பயணிப்பவர்களை அடையாளம் காண இந்த நுழைவு நிர்வாக முறையை டாக்சி சேவைகளுக்கும் அறிமுகப்படுத்தலாம் . டாக்சியில் காணப்படும் நுழைவு கண்காணிப்பு முறையின் QR குறியீட்டை பயணிகள் ஸ்கேன் செய்ய வேண்டும். டாக்சி ஓட்டுநர்கள் தங்களது கார்களைப் பதிவு செய்து தனிச்சிறப்பான QR குறியீட்டைப் பெறலாம். அதன் வழி அவசியம் நேரும்போது பயணிகளைத் தொடர்ப்பு கொள்ளலாம்.

பயனீட்டாளர்கள் நீண்ட நேரத்திற்கு நெருங்கி இருக்காத கடைகளான மருந்தகம் , சில்லறை வியாபாரக் கடைகள் போன்றவை நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்தலாம்.

உணவுக் கடைகள் ( உணவைப் பொட்டலமிட்டு எடுத்துச் செல்லும் கடைகளில் நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டியதில்லை). வேலையாட்களுக்காக உணவு கடைகள் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். தூர இடைவெளி போன்ற இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

மேலும் அதிகமான நடவடிக்கைகளும் சேவைகளும் தொடரும்போது நுழைவு நிர்வாக முறையை செயல்படுத்த வேண்டிய இடங்களின் பட்டியல் இங்கு https://entrymanagementsystemems.com/deployment/ புதுப்பிக்கப்படும்.

வர்த்தக உரிமையாளர் இந்த சேவைக்கு எவ்வாறு பதிவது?

As activities and services are gradually resumed following the various lockdowns, it is important that contact tracing can be done quickly to limit the risk of further community transmission. Entry Management System (EMS) helps support contact tracing efforts as it provides authorities with a record of individuals who enter and exit places. The records will reduce the time needed to identify potential close contacts of COVID-19 patients. This is important so that we can continue advancing towards fewer restrictions on our movements, and our daily lives.

How can a business owner sign up for this service?

வர்த்தகங்கள் இந்த சேவைக்கு பதிந்து கொள்ள இந்த தளத்தை வலம் வரலாம் https://entrymanagementsystemems.com/

வர்த்தகங்களும் தளங்களும் நுழைவுக்கான பதிவையும் வெளியேறுதலுக்கான பதிவையும் கட்டாயப்படுத்த வேண்டுமா?

நுழைவு நிர்வாக முறையில் நுழைவுக்கான விபரத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கினால் போதும். வேலையிடங்களுக்கும் இந்த அணுகுமுறை பொருந்தும்.

இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு எந்தளவு செலவும் ஆட்பலத் தேவையும் ஏற்படும்?

தங்களது தளங்களில் வைப்பதற்கு என வர்த்தகங்களுக்கு நுழைவு நிர்வாக முறையின் தனிச்சிறப்பான QR குறியீடு வழங்கப்படும். வர்த்தகங்கள் நுழைவாய்களில் இந்த குறியீட்டை வைக்க வேண்டும் . வருகையாளர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு உதவியாக நுழைவாய்களில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தலாம்.

கைபேசியை வைத்திருக்காத வருகையாளர்களின் விபரங்களைப் பதிவு செய்ய, பணியாளர்களுக்கு தொடர்பு சாதனக் கருவிகளை வழங்க வேண்டும்.

நுழைவு நிர்வாக முறையை செயல்படுத்தும்போது சில நேரங்களில் நெரிசல் ஏற்படலாம். வர்த்தகங்கள் குறிப்பிட்ட அந்த நேரத்தில் நுழைவு நிர்வாக முறையின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமா?

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் நுழைவு நிர்வாக முறையில் தகவல்களைப் பதிவு செய்வது முக்கியம்.எல்லா நேரங்களிலும் நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்தக்கூடிய திட்டமிடலை வர்த்தகங்கள் கொண்டிருக்க வேண்டும்.

விவேக கைபேசியை வைத்திருக்காவிட்டால் நுழைவு மறுக்கப்படுமா? இரு தேர்வுகளும் இல்லையென்றால் பொது மக்களுக்கு என்ன மாற்று வழி உள்ளது?

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கான ஏற்ற கைபேசியை வைத்திருக்காத வருகையாளர்களுக்கு உதவ நுழைவாய்களில் தள உரிமையாளர்கள் பணியாளர்களை அமர்த்த அறிவுறுத்தப்படுகின்றனர்.

வர்த்தகங்கள் பாரத்தில் மாற்றம் செய்யவோ கூடுதல் தகவலைச் சேர்க்கவோ முடியுமா?

நுழைவு நிர்வாக முறையில் சேகரிக்கப்படும் தகவல் தொடர்பைக் கண்டறிவதற்கான நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. பாரத்தில் மாற்றம் செய்யவோ கூடுதல் தகவலையோ கேள்விகளையோ வர்த்தகங்கள் இணைக்க முடியாது. எனினும் எங்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் கோரிக்கையை முன் வைக்கலாம்.

எனது கட்டடத்தில் நுழைவு நிர்வாக முறையை அமல்படுத்தியுள்ளேன் ( உதாரணம் பேரங்காடி). இதே கட்டடத்தில் உள்ள இதர வர்த்தகர்களும் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டுமா?

வேலையிடம் பாதுகாப்பாக இருக்க அவை நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டும். https://entrymanagementsystemems.com/deployment/ இந்த பட்டியலில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இடங்களான ஒரே கட்டடத்திற்குள் உள்ள பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் முடி திருத்தும் நிலையங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டும்.

அவசர நிலையின் போது கட்டடத்திற்குள் நுழையும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள் ஆகியோரையும் நுழைவு நிர்வாக முறையில் பதிவு செய்ய வேண்டுமா?

அவசர நிலையின்போது அவ்வாறு செய்யத் தேவையில்லை.

நடப்பிலுள்ள விற்பனையாளர் நிர்வாக முறைக்குப் பதிலாக ஏன் நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டும்?

நுழைவு நிர்வாக முறையை பயன்படுத்தும்போது அரசாங்க தரப்பினர் தொடர்பு கொள்வதற்கான தகவல்களை எளிதில் வழங்க முடியும். கோவிட் 19 சம்பவத்துடன் தொடர்பில் இருந்த வருகையாளர்கள் பணியாளர்கள் ஆகியோரது விபரங்களை நுழைவு நிர்வாக முறையிலிருந்து பதிவிறக்கம் செய்து அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட முடியும். நுழைவு நிர்வாக முறையில் சேகரிக்கப்படும் தகவல்கள், அதிகாரத்துவ தரப்பினர் தொடர்பைக் கண்டறிவதற்கான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அரசாங்க தகவல் பாதுகாப்பு முறையின் கீழ் இந்த முறையில் உள்ள தகவல்களைப் பாதுகாக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நுழைவு நிர்வாக முறையின் கீழ் சுற்றுலா சுகாதார அறிவிப்பைச் செய்ய வேண்டுமா ?

சம்பந்தப்பட்ட தளத்திற்குள் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக சுற்றுலா சுகாதார விபரங்களை வழங்க வேண்டும்.

நான் ஏற்கனவே வருகையாளர் நிர்வாக முறையைப் பயன்படுத்தி வருகிறேன். இந்த முறையை நுழைவு நிர்வாக முறையுடன் ஒருங்கிணைக்க முடியுமா ?

தற்போதைக்கு வேறொரு முறையுடன் நுழைவு நிர்வாக முறையை ஒருங்கிணைக்கும் வசதி எங்களிடம் இல்லை

நுழைவு நிர்வாக முறை இயங்காமல் போனால் என்னவாகும்? நுழைவு நிர்வாக முறையின் அமலாக்கத்தில் மாற்று வழி ஏதேனும் உள்ளதா ?

தற்போதுள்ள பயன்முறை இயங்காமல் போனால், வர்த்தகங்கள் நுழைவு நிர்வாக முறையின் மாற்று பயன்முறையைப் பயன்படுத்த வேண்டும், உதாரணத்திற்கு அன்றாட அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைக்க வேண்டும்.

Are there any venues that are exempted?

Entry Management System (EMS) should be deployed in venues that are in operation, e.g. offices, factories, malls and supermarkets.

At open areas or places with transient populations (e.g. MRT stations and parks), QR codes will be put up, and we encourage the public to scan in so they may be reached should the need for contact tracing arise.

Do I need staff to oversee the use of Entry Management System (EMS)?

For Entry Management System (EMS), you will generally need to deploy a staff to facilitate the Check-in by scanning the individual’s temperature.

For Entry Management System (EMS) QR, businesses can display the QR code for individuals to scan and check in on their own. Staff will need to verify that the individuals submit their info and temperature reading before they enter.

கஸ்பியன் டிஜிட்டல் சொலுஷன்ஸ் நிறுவனம் வர்த்தகங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குமா?

தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படும் வர்த்தக உரிமையாளர்கள் எங்களை இங்கு தொடர்பு கொள்ளலாம் https://entrymanagementsystemems.com/

Must all street-hail passengers scan QR code?

Passengers should be socially responsible and scan the Entry Management System (EMS) QR codes at the point of boarding. If passengers are unwilling to do so, taxi drivers can decline to take on such passengers.

What about taxi booking and online hires? Do they also need to scan the QR Code?

No. Passengers who book their rides via taxi apps or ride hail platforms need not do the same as there is already other data available to help in contact tracing efforts when the need arises.

எனது தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படும்?

தகவல் பாதுகாப்பு முறையின் கீழ் தகவலைப் பாதுகாக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படும் என்பதோடு தொடர்பு நோக்கத்திற்காக அதிகாரத்துவ தரப்பினர் மட்டுமே இந்த தகவலைப் பெற முடியும். தொடர்புக்கான அவசியம் இல்லாத போது தகவல்கள் அழிக்கப்படும். பொதுச் சேவை நிர்வாக சட்டத்தின் கீழ், அரசாங்க அதிகாரிகள் தகவலை வேண்டுமென்றே வெளியிட்டால் அல்லது சொந்த நன்மைக்காக பயன்படுத்தினால் குற்றமாகும். அந்த குற்றத்திற்காக ஐயாயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க முடியும்.

தனிநபர் ஒருவர் தேவைப்படும் தகவலை வழங்காமல் இருக்க முடியுமா?

அனைத்து விபரங்களையும் ( பெயர், கைபேசி எண், உடல் வெப்ப அளவு ) கட்டாயம் வழங்க வேண்டும்.

அரசாங்கம் இந்த தகவலைப் பயன்படுத்த முடியுமா? இந்த தகவல்கள் எதற்காக பயன்படுத்தப்படும் ?

நுழைவு நிர்வாக முறையில் சேகரிக்கப்படும் தகவல் மேகக்கணி முறையில் சேகரித்து வைக்கப்படும். தொடர்புக்கான அவசியம் இருக்கும் போது அந்த தகவலை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள்.

தனிநபர் விபரங்களை யார் பார்ப்பது என்பதற்கு கடும் பாதுகாப்பு விதிமுறைகள் விதிக்கப்படும். அவசியம் ஏற்படும்போது தொடர்பைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள் மட்டுமே இந்த தகவலைப் பார்க்க முடியும்

எந்த சூழ்நிலையில் தொடர்பைக் கணடறியும் நோக்கத்திற்காக அதிகாரிகளுக்கு எனது தகவல்கள் வழங்கப்படும் ?

தொடர்பைக் கண்டறிவதற்கான குறிப்பிட்ட காரணங்களுக்காக விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்தும் போது தகவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுமா?

நுழைவு நிர்வாக முறையில் சேகரிக்கப்படும் தகவல், உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மேகக்கணி முறையில் சேகரிக்கப்படும். தொடர்புக்கான அவசியம் ஏற்படும் போது அதிகாரிகள் இந்த தகவலைப் பெறுவார்கள். அனுமதி பெற்ற அதிகாரிகள் மட்டுமே இந்த தகவலைப் பெற முடியும்.

தொடர்பைக் கண்டறியும் ஒரே நோக்கத்திற்காக இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மறைக்கப்படும் இந்த அனைத்து தகவலையும் அனுமதியுள்ள தரப்பினர் மட்டுமே பார்க்க முடியும். தொடர்பைக் கண்டறிவதற்கான அவசியம் இனி ஏற்படாத போது தகவல்கள் அழிக்கப்படும்.

பதிவேற்றம் செய்த பின்னர் எனது தகவலை அழிக்கும்படி கேட்க முடியுமா?

தொடர்பு தேவைக்காக உங்களது தகவல் அழிக்கப்படாது. அதற்கான தேவை இல்லாத போதே அந்த தகவல்கள் அழிக்கப்படும்.

ta_INதமிழ்
en_USEnglish my_MMဗမာစာ ms_MYBahasa Malaysia zh_CN简体中文 id_IDBahasa Indonesia ta_INதமிழ்