நுழைவு கண்காணிப்பு முறை ( நு.க.மு) செயல்படுத்த வேண்டிய இடங்கள் :

தொழிலாளர்கள் வெளி வருகையாளர்கள் ஆகியோரின் வருகையைப் பதிவு செய்ய நுழைவு கண்காணிப்பு முறையை செயல்படுத்த பரிந்துரைக்கப்படும் வர்த்தகங்கள் சேவைகள் ஆகியவற்றின் விபரங்கள்.

 • அலுவலகங்கள் தொழிற்சாலைகள் போன்ற வேலையிடங்கள்
 • பள்ளிகள் , பல்கலைக்கழகங்கள்
 • பாலர் பள்ளிகள்
 • மருத்துவமனை கிளினிக் போன்ற சுகாதார மையங்கள்
 • பராமரிப்பு இல்லங்கள்
 • முடி திருத்தும் கடைகள் / சிகை அலங்கார நிலையங்கள்
 • பல்வகை பொருட்களை விற்கும் கடைகள்
 • காய்கறி இறைச்சி சந்தைகள்
 • பேரங்காடிகள்
 • காலை சிற்றுண்டியுடன் கூடிய தங்கும் விடுதிகள், தங்கும் விடுதிகள், சுற்றுலா விடுதிகள்
 • சுற்றுலா ஈர்ப்பு தளங்கள்
 • உணவகங்கள் / உணவு விடுதிகள்
 • சேவை மையங்கள் 
 • பொருள் - போக்குவரத்து சேவைகள் ( கிடங்குகள்/ பேருந்து முனையங்கள் )

கூடுதல் வழிகாட்டல்:

 • சாலையோர நிறுத்தங்களில் இருந்து பயணிப்பவர்களை அடையாளம் காண இந்த நுழைவு கண்காணிப்பு முறையை டாக்சி சேவைகளுக்கும் அறிமுகப்படுத்தலாம் .
 • டாக்சியில் காணப்படும் நுழைவு கண்காணிப்பு முறையின் QR குறியீட்டை பயணிகள் ஸ்கேன் செய்ய வேண்டும். பயனீட்டாளர்கள் நீண்ட நேரத்திற்கு நெருங்கி இருக்காத கடைகளான மருந்தகம், சில்லறை கடைகள் போன்றவை நுழைவு கண்காணிப்பு முறையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் கட்டாயப்படுத்தப்படவில்லை.
 • உணவருந்த அனுமதிக்கும் கடைகளில் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். தூர இடைவெளி போன்ற இதர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 மேலும் அதிகமான நடவடிக்கைகளும் சேவைகளும் அனுமதிக்கப்படும்போது இந்த பட்டியல் புதுப்பிக்கப்படும்

ta_INதமிழ்
en_USEnglish my_MMဗမာစာ ms_MYBahasa Malaysia zh_CN简体中文 id_IDBahasa Indonesia ta_INதமிழ்