தலைப்பு : ஏன் நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டும்?

கோவிட்-19 தொற்றைக் கண்டறிய நுழைவு நிர்வாக முறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்

கோவிட்-19 வைரசுக்கு எதிராக நோய் தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் மத்தியில் வைரஸ் பரவலைக் குறைப்பதில் சில அணுகுமுறைகள் உதவியாக இருக்கின்றன.வீட்டிலேயே இருப்பதில் வழங்கப்பட்டிருக்கும் தளர்வும் , தூர இடைவெளியின் அமலாக்கமும் நல்ல பலனைத் தர, மக்கள் நடமாட்டத்தைக் கண்டறிவதில் நாடு சிறந்த முறையைக் கொண்டிருக்க வேண்டும்.மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதின் வழி வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான உரிய நேரம் இதுவாகும்.

ஒருவரது நடமாட்டத்தைக் கண்டறிவது

வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்

வைரஸ் பாதிப்பைக் குறைக்கும்

இடம் பாதுகாப்பாக இருக்கும்

கோவிட்-19 வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமாக அமைகிறது

பேரளவில், மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பது கடினம் என்பதோடு சிறந்த பலனையும் தராது. வர்த்தக நடவடிக்கைகளையும் பாதிக்கலாம்.நுழைவு நிர்வாக முறை அந்த சிக்கலை களையும். சுகாதார நெருக்கடி காலத்தில் இந்த முறை கைகொடுக்கும். வர்த்தகர்கள் , சமூகத்தில் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாகவும் இருக்க முடியும்.

நு.க.மு - வின் பயன்கள்

விரைவானது

இரண்டே செயல்களில், வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை இந்த முறையில் பதிந்து கொள்ள முடியும். வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கியூ.ஆர் (QR) குறியீட்டை தங்களின் வர்த்தக தள நுழைவாயிலில் வைக்க வேண்டும்.தளத்திற்குள் நுழையும் பணியாளர்கள்,வருகையாளர்கள், வாடிக்கையாளர்கள் அந்த குறீயீட்டை கைபேசியில் பதிவு எடுக்க வேண்டும்.பின்னர் அவர்கள் தங்களது தொடர்பு விபரங்களையும் உடல் வெப்ப நிலையையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையின் கீழ் ஒருவரது விபரங்களை விரைந்து பதிய முடியும்.வர்த்தக தளத்திற்கு வெளியே நீண்ட வரிசையைத் தடுக்க முடியும்.( வர்த்தக நடவடிக்கைகளையும் பாதிக்காது)

எளிய தரவு நிர்வகிப்பு

வர்த்தக தளத்திற்குள் நுழைபவர்களின் விபரங்கள் இந்த நுழைவு நிர்வாக முறையில் சேகரிக்கப்படும். குழப்பும் வகையிலான கூகள் பத்திரங்கள் இருக்காது. நூற்றுக்கணக்கானோர், வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் ஒரே தாளையும் , பேனாவையும் பயன்படுத்தும் தேவை இருக்காது. பத்திரங்களைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய கட்டாயமும் வர்த்தகங்களுக்கு இருக்காது. நுழைவு நிர்வாக முறை இவையனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.

ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்

வர்த்தக தளத்திற்குள் நுழைந்த ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் கண்டிருந்தால், அந்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இந்த நுழைவு நிர்வாக முறையைக் கொண்டு அடையாளம் கண்டுவிட முடியும்.அவர்களைத் தொடர்பு கொள்ளும் விதமாக அந்த தகவல்கள் சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். தேதியையும் நேரத்தையும் கொண்டு, வைரஸ் தொற்று ஏற்படக்கூடியவர்களை மட்டும் தேடுவதற்கு எளிதாக இருக்கும்.

வர்த்தகத்தைப் பாதுகாக்கும்

பொறுப்புணர்வுமிக்க வர்த்தகர்கள், தங்களது வர்த்தக தளத்திற்குள் நுழையும் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியமாகும். நுழைவு நிர்வாக முறையின் கீழ், வர்த்தகர்கள் தங்களது பணியாளர்கள் , வாடிக்கையாளர்கள், வருகையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.

நுழைவு நிர்வாக முறையைக் கொண்டிருப்பதன் வாயிலாக வர்த்தகர்கள், தங்களது வர்த்தக தளம் பாதுகாப்பாக இருக்க அதிக தொகையில் முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்காது. தங்களது வர்த்தக தளத்திற்குள் நுழைந்தவர்களின் விபரங்களை வழங்கி சுகாதார தரப்புக்கு உதவியாகவும் இருக்க முடியும்.

விரைந்து செயல்படுங்கள்

நுழைவு நிர்வாக முறையில் வர்த்தகத்தை விரைந்து பதிவு செய்யலாம்.பதிந்து கொண்ட வர்த்தக நிறுவனத்திற்கு, தங்களது வர்த்தக நுழைவாயிலில் வைக்க வேண்டிய கியூ.ஆர் ( QR) குறியீடு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். வர்த்தக தளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவாய்கள் இருந்தாலும் இந்த தனித்துவமான குறியீட்டை அனைத்து நுழைவாய்களிலும் பயன்படுத்தலாம்.

வர்த்தகர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது குறிப்பிட்ட தங்களது வர்த்தகத்திற்கு ஏற்ற ஒரு முறை வேண்டுமென விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது தேவைக்கு ஏற்ற வகையில் இந்த முறையை எங்கள் தரப்பு ஏற்படுத்தி தரும். கோரிக்கைக்கு ஏற்ப, நுழைவு நிர்வாக முறையில் வர்த்தகத்தின் முத்திரை உட்பட வருகையாளர்களுக்கான சிறப்புத் தகவலும் இணைத்துக் கொள்ளப்படும். பற்றுச் சீட்டு, விலைக் கழிவு, கூடுதல் தகவல்கள் போன்றவற்றையும் இடம் பெறச் செய்யலாம்.

ta_INதமிழ்
en_USEnglish my_MMဗမာစာ ms_MYBahasa Malaysia zh_CN简体中文 id_IDBahasa Indonesia ta_INதமிழ்